அலி கமெனியின் இறுதிச்சடங்கு: 4 மாதங்களாக உடல் பாதுகாக்கப்பட்ட மர்மம்
உலக அரசியலில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டு 4 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அவரது இறுதிச்சடங்கு ஊர்வலங்கள் தொடங்கியிருக்கின்றன.
அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கமேனி உயிரிழந்ததுடன், இந்தத் தாக்குதலில் கமேனியுடன் சேர்த்து அவருடைய மூத்த மகள், மருமகன், மருமகள் மற்றும் 14 மாதமே ஆன அவரது பேத்தி ஜஹ்ரா முகமது கோல்பயேகானி ஆகியோரும் பலியாயினர்.
இவர்களது உடல்கள் பொதுமக்களின் அஞ்சலிக்காக தெஹ்ரானில் உள்ள இமாம் கொமேனி கிராண்ட் மொசல்லா வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
உடல் எப்படிப் பாதுகாக்கப்பட்டது
பொதுவாக இஸ்லாமிய ஷரியத் சட்டங்களின்படி உடலை ரசாயனங்கள் தடவி பதப்படுத்துவது (Chemical Embalming) தடை செய்யப்பட்டுள்ளது.

அப்படியிருக்க கமேனியின் உடல் எப்படிப் பாதுகாக்கப்பட்டது என்பது பெரும் பேசுபொருளாக இருக்கிறது.
இது குறித்து வைத்தியர் முகமது உமர் விளக்குகையில், "போர்க்காலச் சூழல் போன்ற விதிவிலக்கான அசாதாரண சூழ்நிலைகளில், உடலை அடக்கம் செய்யத் தாமதப்படுத்துவதற்கும், குளிரூட்டப்பட்ட முறையில் உடலைப் பாதுகாப்பதற்கும் ஷியா (Shia) பிரிவு சட்டங்களில் சில விலக்குகள் உள்ளன.
இதன்படி, கமேனியின் உடலுக்கு எந்த ரசாயனமும் பயன்படுத்தாமல், அதிநவீன மிகக் குளிர்ந்த குளிர்பதனக் கிடங்கில் (Refrigerated Cold Storage) வைத்து உறைநிலையில் 4 மாதங்களாகப் பாதுகாத்துள்ளனர்" என்று குறிப்பிடுகிறார்.
நாடுகளின் பட்டியல்
இந்நிலையில், அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வில் இலங்கை சார்பாக பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
இவர்களைத் தவிர சீனா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள பல நாடுகளின் அரச பிரதிநிதிகள் வருகை தரவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதற்கமைய, இந்த விசேட நிகழ்வில் கலந்துகொள்ளும் 30க்கும் மேற்பட்ட நாடுகளின் பட்டியலை அவர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர்.
அந்த பட்டியலில் ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், இந்தியா, துருக்கி, துர்க்மெனிஸ்தான், தஜிகிஸ்தான், ஈராக், ஜோர்ஜியா, அர்மேனியா, ஆப்கானிஸ்தான், ஓமான், கத்தார், அசர்பைஜான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பங்களாதேஷ், எகிப்து, கசகஸ்தான், கானா, நிகரகுவா, கொங்கோ, செர்பியா, துனிசியா, லெபனான், நமீபியா, மலேசியா, கியூபா, இலங்கை, மியான்மர், காம்பியா, தாய்லாந்து ஆகிய நாடுள் உள்ளடக்கப்பட்டுள்ளன
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |