ஹோர்முஸ் நீரிணையில் பிரான்ஸின் கண்ணிவெடி வேட்டை கப்பல்கள்!
ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கடல்சார் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளைத் தொடங்குவதற்காக, பிரான்ஸ் நாடு தனது பிரத்யேக கண்ணிவெடி வேட்டைக் கப்பல்களை அங்கு அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் எக்ஸ் (X) தளத்தில் பதிவொன்றை வௌயிட்டுள்ளார்.
அதில், அவர் ஹோர்முஸ் நீரிணையில் முழுமையான கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கும், கடல்வழிப் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், தங்களது சர்வதேச கூட்டாளிகளுடன் இணைந்து பங்களிக்க பிரான்சின் கண்ணிவெடி தடுப்புப் படைகள் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார்.
பிரான்ஸ் போர்க்கப்பல்
மேலும், ஓமான் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைகளுக்குப் பிறகு, பிரான்சின் “சார்லஸ் டி கோல்” என்ற புகழ்பெற்ற விமானம் தாங்கி போர்க்கப்பலை மீண்டும் துறைமுகத்திற்குத் திருப்பியனுப்ப முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
La France a déployé au Moyen-Orient des moyens de déminage, avec notamment deux chasseurs de mines. Accompagnés de deux frégates et d’un avion de patrouille maritime, ces moyens sont prêts à contribuer, avec nos partenaires, à la pleine reprise de la navigation et à garantir la… pic.twitter.com/4RyZCwx3h6
— Emmanuel Macron (@EmmanuelMacron) July 3, 2026
இருப்பினும், தங்களின் கண்ணிவெடி தடுப்புப் படைகளும், அவற்றுக்கான பாதுகாப்புப் படைகளும் தொடர்ந்து அங்கேயே நிலைநிறுத்தப்பட்டிருக்கும் என்றும், கூட்டாளி நாடுகளுடன் இணைந்து எந்தவொரு சூழலிலும் உடனடியாகச் செயல்பட அவை தயாராக இருக்கும் என்றும் மக்ரோன் தெளிவுபடுத்தியுள்ளார்.
முன்னதாக, கடந்த மாத இறுதியில் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் இந்தத் திட்டத்தை முதன்முதலில் அறிவித்த போது, ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் பிரான்ஸ் தலையிடுவதை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
4 நாட்கள் முன்