லலித் - குகன் விவகாரத்தில் புதிய சாட்சியம்...
இலங்கையில் இடம்பெற்ற கடத்தல்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கமும் அரசு இயந்திரமும் பொறுப்புக்கூற வேண்டும் என வலிக்கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த கால ஆட்சிக்காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் லலித் - குகன் கடத்தல் வழக்கு தொடர்பில் தற்போதைய அரசாங்கம் தீவிர விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரியள்ளார்.
"இவை கடந்த காலத்தில் நடந்தவை, இதற்கும் எனக்கும் தொடர்பில்லை" என தற்போதைய ஆட்சியாளர்கள் தப்பித்துக்கொள்ள முடியாது எனவும், குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயாரா என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
அத்துடன், போரினால் பாதிக்கப்பட்டு கண்பார்வையை இழந்த முன்னாள் போராளிகள் இன்றும் சந்தித்து வரும் சமூக, பொருளாதார நெருக்கடிகள் குறித்துக் கவலை வெளியிட்டதுடன், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மார்களின் நீதிக்கான காத்திருப்புக்கு அரசாங்கம் உடனடியாகப் பதில் அளிக்க வேண்டும் என்றும், தமிழ் மக்கள் தமது வாக்களிப்பு முறையில் தீர்க்கமான அரசியல் சித்தாந்தத்துடன் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் ஐ.பி.சி தொலைக்காட்சியின் சக கரவியூகம் அரசியல் கலந்துரையாடலில் கலந்துகொண்டு மேலும் கருத்து தெரிவித்த அவர்,