வேகமெடுக்கும் லலித்,குகன் வழக்கு : முடுக்கி விடப்படும் விசாரணை
யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டு காணாமல் போன லலித் மற்றும் குகன் ஆகியோரின் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக லலித் குமார் வீரராஜுவின் சகோதரிகள் இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்தனர்.
முன்னணி சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட, லலித் குமார் வீரராஜுவின் தந்தை ஆறுமுகம் மற்றும் இரண்டு சகோதரிகளும் இன்று கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்திருந்தனர்.
நீதிமன்றில் முன்னிலையாகாத கோட்டாபய
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆறுமுகம் வீரராஜா, யாழ்ப்பாணம் நீதிமன்றம் மற்றும் கொழும்பு நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளில் பல சந்தர்ப்பங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவிட்டிருந்தாலும், அவர் இதுவரை முன்னிலையாகவில்லை.
இந்த அரசாங்கத்தால் நீதி வழங்கப்படும் என்று தானும் தனது குடும்பத்தினரும்நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். சகோதரி கல்யாணி தெரிவிக்கையில், எனது அண்ணன் கடத்தப்பட்டு 14 வருடங்கள் கடந்துவிட்டன.நாங்கள் நீதிமன்றங்களில் சாட்சி வழங்கினோம்.
நீதிக்காக போராடுவோம்
மேலும் காவல்துறை தலைமையகத்திலும் சாட்சி வழங்கினோம்,ஆனால் எதுவும் நடக்கவில்லை.எத்தனை வருடங்கள் கடந்தாலும் நீதிக்காக போராடுவோம் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
