அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்கள்!

Parliament of Sri Lanka Harshana Nanayakkara Jagath Wickramaratne
By Sathangani Aug 18, 2026 10:59 AM GMT
Report

புதிய இணைப்பு

அரசாங்கத்தால் இன்று (18) நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நீதிமன்றில் சவாலுக்குட்படுத்த ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய, SC/SD/31/2026 எனும் இலக்கத்தின் கீழ் இந்த மனு இன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பிலும், அதன் அரசியலமைப்புச் செல்லுபடியாகும் தன்மை மற்றும் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் நீதிமன்றத்தின் கருத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவே இவ்வாறு உயர் நீதிமன்றத்தை நாடியது.

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்கள்! | 22Nd Constitutional Amendment Bill Tabled In Parli

அரசியலமைப்பிற்கு மேற்கொள்ளப்படும் எந்தவொரு திருத்தமும் நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பில், அதிகாரப் பகிர்வில் மற்றும் மக்களின் உரிமைகளில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் பற்றி ஆழமாகக் பரிசீலிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக் காட்டுகிறது.

இதேவேளை அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட மூல வரைவு, அரசியலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி சர்வஜன அதிகாரத்தினால் இன்று (18) உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இணைப்பு

அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் முதலாவது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பொருளாளர் டி.எம்.எஸ். பசிது சில்வா மற்றும் அச்சங்கத்தின் உதவிச் செயலாளர் ஆகியோரால் இன்று (18) இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்குத் தேவை எனின், அது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்கினால் அங்கீகரிக்கப்பட்டு, சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் மூலமும் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனத் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்கள்! | 22Nd Constitutional Amendment Bill Tabled In Parli

முதலாம் இணைப்பு

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம்! 

அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூல வரைவு மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூல வரைவு என்பன நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் சற்று முன்னர் குறித்த சட்டமூலங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்காக அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.

சர்ச்சையைக் கிளப்பிய கஞ்சிப்பானி இம்ரானின் கைது விவகாரம் : பாதுகாப்பு பிரதியமைச்சரின் அறிவிப்பு

சர்ச்சையைக் கிளப்பிய கஞ்சிப்பானி இம்ரானின் கைது விவகாரம் : பாதுகாப்பு பிரதியமைச்சரின் அறிவிப்பு

வர்த்தமானி அறிவித்தல் 

அத்துடன், ஏனைய நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்காக நீதித்துறை திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்கள்! | 22Nd Constitutional Amendment Bill Tabled In Parli

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்தச் சட்டமூல வரைவுகள் தொடர்பான மேலதிக விவாதங்கள் எதிர்வரும் அமர்வுகளின் போது முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை சட்டமூலமொன்றின் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு ஒரு வாரத்திற்குப் பின்னரே அது முதலாம் வாசிப்பிற்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதோடு, அதன்பின்னர் எவரேனும் நீதிமன்றத்தை நாடுவதற்கு ஒரு வார காலம் அவகாசம் கிடைக்கும்.

முன்னாள் அமைச்சர் ராஜிதவின் சகோதரர் மஹில் சேனாரத்ன அதிரடி கைது!

முன்னாள் அமைச்சர் ராஜிதவின் சகோதரர் மஹில் சேனாரத்ன அதிரடி கைது!

சபாநாயகருக்கு அறிவிக்கப்படும்

அதன்படி, உயர் நீதிமன்றம் மனுக்களை விசாரித்து 3 முதல் 21 நாட்களுக்குள் தனது தீர்மானத்தை நாடாளுமன்ற சபாநாயகருக்கு அறிவிக்கப்படும்.

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்கள்! | 22Nd Constitutional Amendment Bill Tabled In Parli

22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 63 இலிருந்து 65 ஆகவும் உயரும். 

நீதித்துறை அமைப்புகள் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படுவதன் மூலம் மேல்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 62 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் : நீதிமன்றம் உத்தரவு

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் : நீதிமன்றம் உத்தரவு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026