உலகின் மிக அவலட்சணமான நாய்க்கான பட்டத்தை ஜின்னி வென்றது
‘ஜின்னி லூ’ (Ginny Lou) எனப்படும் 6 வயதுடைய பக் (Pug) இன நாய், 2026ஆம் ஆண்டுக்கான உலகின் அவலட்சணமான நாய் போட்டியில் வெற்றியீட்டி அரிய பட்டத்தைத் தனதாக்கியுள்ளது.
வித்தியாசமான தோற்றம் கொண்டிருந்தாலும், அன்பான குணம் கொண்ட நாய்கள் ஒன்றுகூடிய இந்தப் போட்டி, இந்த ஆண்டு தனது 50ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடியது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சாண்டா ரோசாவில் அமைந்துள்ள சோனோமா கவுண்டி கண்காட்சி மைதானத்தில், ஆகஸ்ட் 14ஆம் திகதி இந்தப் போட்டி நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் அவலட்சணமான நாய்
சோனோமா - மரின் விவசாயச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போட்டியில், பல்வேறு தனித்துவமான தோற்றங்களைக் கொண்ட நாய்கள் கலந்து கொண்டன.

இவற்றில் 6 வயதுடைய ஜின்னி லூ தனது வித்தியாசமான தோற்றத்தின் மூலம் நடுவர்களின் கவனத்தை ஈர்த்து.
இதனால் 2026ஆம் ஆண்டின் ‘உலகின் அவலட்சணமான நாய்’ என்ற பட்டத்தை வென்றுள்ளது.
உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கவனத்தை ஈர்க்கும் இந்தப் போட்டி, நாய்களின் தோற்றத்தை மட்டும் முன்னிலைப்படுத்தாமல், அவற்றின் தனித்துவம், வசீகரம் மற்றும் அன்பான குணநலன்களையும் கொண்டாடும் நிகழ்வாக நடத்தப்பட்டு வருகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |