காஞ்சன விஜேசேகர நிலக்கரி விசாரணை தொடர்பான ஆணைக்குழுவில் முன்னிலை
முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, நிலக்கரி கொள்வனவு தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவில் இன்று (18.08.2026) முன்னிலையாகியுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் நிலக்கரி கொள்வனவு மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் ஒரு பகுதியாகவே அவர் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் நிலக்கரி கொள்வனவு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள், நடைமுறைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து ஆணைக்குழுவினால் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் காஞ்சன
இலங்கையின் மின்சார உற்பத்திக்கான பிரதான எரிபொருட்களில் ஒன்றாக நிலக்கரி காணப்படுவதுடன், அதன் கொள்வனவு தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருந்தன.

இந்நிலையில், நிலக்கரி கொள்வனவு நடவடிக்கைகளில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் மற்றும் நிர்வாகத் தீர்மானங்கள் தொடர்பில் உண்மைகளை கண்டறியும் நோக்கில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இன்றைய விசாரணைகளில் நிலக்கரி கொள்வனவு தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்து அவரிடம் கேள்விகள் எழுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |