முன்னாள் சுகாதார அமைச்சர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சற்றுமுன்னர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகி உள்ளார்.
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றுடன் தொடர்புடையதாக வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விசாரணைக்காக கெஹெலிய ரம்புக்வெல்ல சக்கர நாற்காலியில் வருகை தந்திருந்தமை கவனம் பெற்றுள்ளது.
கெஹெலிய ரம்புக்வெல்ல
இந்நிலையில் இந்த விசாரணை தொடர்பான மேலதிக விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் பயன்படுத்திய இரண்டு அரச வாகனங்களை, அவர் அமைச்சுப் பதவியிலிருந்து விலகிய பின்னரும் மீள ஒப்படைக்காமல் பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த விசாரணை இடம்பெறலாம் என எதிர்வு கூறப்படுகிறது.
Mercedes-Benz மற்றும் V8 Land Cruiser ஆகிய இரண்டு வாகனங்கள் 2024 மே 24 அன்று சுகாதார அமைச்சிடம் மீள ஒப்படைக்கப்பட்டிருந்தாலும், அவை இடைப்பட்ட காலத்தில் தவறாகப் பயன்படுத்தப்பட்டனவா என்பது தொடர்பில் CIABOC விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விவகாரத்தில் ரம்புக்வெல்லவிடம் மேலதிக வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாகி இருக்கலாம் என தென்னிலங்கை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |