திடீரென பதவி விலகிய ஈரானின் எரிபொருள்துறை அமைச்சர்
ஈரான் எரிபொருள் துறை அமைச்சர் மொஹ்சென் பக்னெஜாத் திடீரென பதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதையடுத்து அரசுக்கு சொந்தமான தேசிய ஈரானிய எண்ணெய் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹமீத் போவர்ட் இடைக்கால அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு ஊடகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
ஒபெக் உறுப்பு நாட்டின் எரிபொருள்துறை அமைச்சர்
பதவி விலகிய மொஹ்சென் பக்னெஜாத், 2024 முதல் ஒபெக் உறுப்பு நாட்டின் எரிபொருள்துறை அமைச்சராக இருந்து வந்துள்ளார்.

இது குறித்து ஜனாதிபதி அலுவலகத்தின் தகவல் தொடர்பு துணைத் தலைவர் மெஹ்தி தபதபாயி அரசுத் தொலைக்காட்சியிடம் கூறுகையில்,
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம்
தனிப்பட்ட காரணங்களுக்காக பதவிவிலகல்
பக்னெஜாத் தனிப்பட்ட காரணங்களுக்காக நீண்ட காலத்திற்கு முன்பே பதவிவிலகியிருந்தார். பக்னெஜாத்தின் தொடர் வற்புறுத்தலால் அவரது பதவிவிலகலை ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் ஏற்றுக்கொண்டார் என்று தெரிவித்தார்.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஏழு மாதங்களாக நடந்து வரும் போரினால் நாட்டின் பொருளாதாரத்தின் மீது அழுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில் பக்னெஜாத் பதவிவிலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |