திரைமறைவில் NPP அரசை இயக்கும் மறைகரம் - அம்பலப்படுத்தும் விமல் வீரவன்ச
தற்போதைய அரசாங்கத்தை திரைமறைவில் இயங்கும் ஒரு குழுவே வழிநடத்தி வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
எம்பிலிப்பிட்டிய பகுதியில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளை மறந்து தொடர்ந்தும் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றவாளியாகக் காணப்பட்டு தண்டனை
அதேநேரம், அரசாங்கம் இராஜதந்திர ரீதியிலான அணுகுமுறைகளை மேற்கொள்வதிலும் தோல்வி கண்டுள்ளதாக, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.

இதேவேளை நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்குப் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலப்பகுதியை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மேன்றையீட்டு நீதிமன்றம் இன்று (5) உத்தரவிட்டுள்ளது.
கைது செய்யப்படுவதற்காகத் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த ஞானசார தேரர், சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று மேன்றையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம் ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட தண்டனையின் எஞ்சிய காலப்பகுதியைச் சிறையில் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்குப் பணிப்புரை விடுத்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
you may like this