நடுக்கடலில் கடலில் கப்பல் மீது தாக்குதல் - 4 பேர் பலி: வலுக்கும் சர்ச்சை
கரீபியன் கடலில் கப்பல் ஒன்றை இலக்காகக் கொண்டு அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட ஒரு கப்பலை, 2026 அக்டோபர் 4, ஞாயிற்றுக்கிழமை அன்று கரீபியன் கடலில் தாக்கியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
எனினும், இத்தகைய தாக்குதல்கள் சட்டத்திற்குப் புறம்பான கொலைகளாக இருக்கலாம் என மனித உரிமை நிபுணர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
போதைப்பொருள் பயங்கரவாதிகள்
கரீபியன் கடல் பகுதியில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் இதுபோன்ற நடவடிக்கைகளில் உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்பாக மனித உரிமை அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.

லத்தீன் அமெரிக்காவில் உள்ள போதைப்பொருள் கும்பல்களுடன் அமெரிக்கா "ஆயுத மோதலில்" ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
மேலும் , அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் வரவைக் கட்டுப்படுத்தவும் , அதிகப்படியான போதைப்பொருள் பயன்பாட்டினால் அமெரிக்கர்கள் உயிரிழப்பதைத் தடுக்கவும் இந்தத் தாக்குதல்கள் அவசியமான ஒரு நடவடிக்கை என்று அவர் நியாயப்படுத்தியுள்ளார்.
செப்டம்பர் 2025-ல் ட்ரம்ப் நிர்வாகம், "போதைப்பொருள் பயங்கரவாதிகள்" என்று அழைப்பவர்களைக் குறிவைக்கத் தொடங்கியதிலிருந்து, அமெரிக்க இராணுவம் நடத்திய 70 படகுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை, இந்த சமீபத்திய தாக்குதலுடன் குறைந்தது 235 ஆக உயர்ந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |