முக்கிய அறிவிப்பு : சங்குப்பிட்டி பாலம் ஊடான போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தம்!
நாவற்குளி –கேரதீவு – மன்னார் (A32) வீதியில் அமைந்துள்ள சங்குப்பிட்டி பாலம் (Bridge No. 18/1) ஊடான போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக வட மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) தெரிவித்துள்ளது.
சங்குப்பிட்டி பாலத்தில் அவசர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையிலேயே இவ்வாறு போக்குவரத்து இடைநிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, புதன்கிழமை (2026.10.07) காலை 8.00 மணி முதல் திங்கட்கிழமை (2026.10.12) காலை 8.00 மணி வரையான ஐந்து நாட்கள் குறித்த பாலத்தின் ஊடான அனைத்து வகையான போக்குவரத்துகளும் தடை செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மாற்று வீதிகளைப் பயன்படுத்தல்
எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு வட மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், பாலத்தின் திருத்தப் பணிகள் எதிர்பார்க்கப்பட்ட காலத்திற்கு முன்னர் நிறைவடைந்தால், குறித்த திகதிக்கு முன்னதாகவே போக்குவரத்திற்காக பாலம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |