போலி ஓட்டுநர் உரிமங்களை விற்ற தம்பதியினர் கைது
பணத்திற்காக போலி ஓட்டுநர் உரிமங்களை விற்றதற்காக, ஐம்பது வயதுகளில் உள்ள தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக fகல்கிசை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேகத்திற்குரிய தம்பதியினரிடமிருந்து ஒரு போலி ஓட்டுநர் உரிமம் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
போலி ஓட்டுநர் உரிமம் வைத்திருந்த நபர் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் தொடர்பில், வெரஹேர ஜனதா மாவத்த பகுதியில், அதிகாரிகள் குழு ஒன்று சந்தேகத்திற்குரிய தம்பதியினரைக் கைது செய்தது.
ஒன்றரை வருடங்களாக விற்கப்படும் போலி ஓட்டுநர் உரிமங்கள்
மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், சந்தேக நபர்கள் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக ரூ. 5,000 முதல் தொடங்கும் விலையில் போலி ஓட்டுநர் உரிமங்களை விற்று வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

கல்கிசை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியான தலைமை ஆய்வாளர் நிலந்த கமகே உள்ளிட்ட குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |