நாட்டின் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Power cut Sri Lanka Power Cut Today Minister of Energy and Power Mega Power
By Thulsi Nov 25, 2026 04:39 AM GMT
Report

அரசாங்கம் முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் காரணமாக, அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டு ஏற்படக்கூடும் என எரிசக்தித் திட்டமிடலாளர் அசோக அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

சூரிய மின்சக்தி தொடர்பில் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரமும் தற்போது காணாமல் போயுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் முன்வைத்துள்ள புதிய நடைமுறையில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் அவர் இவ்வாறு விளக்கமளித்தார், அமைச்சரவைப் பத்திரமொன்றை அமைச்சர் அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

பெண் கலெக்டருக்கு முறையற்ற குறுஞ்செய்தி..! பதவியிலிருந்து விலக TVK mla அருள் விக்னேஷ் முடிவு

பெண் கலெக்டருக்கு முறையற்ற குறுஞ்செய்தி..! பதவியிலிருந்து விலக TVK mla அருள் விக்னேஷ் முடிவு

மின்கட்டமைப்பு செயலிழக்கக் கூடும் 

அதற்கு என்ன நடந்தது என்பது எமக்கு இன்னும் தெரியாது. அந்த அமைச்சரவைப் பத்திரத்தின்படி, மின்சார சபை எதிர்பார்த்ததை விட அதிக வேகத்தில் கூரை மீது சூரிய மின்படலங்கள் அமைக்கப்படுகின்றன என்பதே இதற்குக் காரணமாகக் கூறப்பட்டுள்ளது.

நாட்டின் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Islandwide Power Cut Announcement

அவற்றிலிருந்து பகல் வேளையிலேயே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பகல் வேளையில் உற்பத்தி செய்யப்படும் அந்த மின்சாரத்தைச் சேமித்து வைத்து இரவில் பெற்றுக்கொள்ளும் அளவிற்கு மின்சார சபை தயாராக இருக்கவில்லை.

எனவே, 2030 ஆம் ஆண்டளவில் அந்த மின்சார அளவைப் பெற்றுக்கொள்ள மின்சார சபை தயாராக இல்லாததால், அடிக்கடி மின்கட்டமைப்பு செயலிழக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.

ஆகவே, அந்தக் காரணத்தை அடிப்படையாகக் கொண்டு ஒருபுறம் பார்க்கும்போது, இதனை வலுவிழக்கச் செய்யும் நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் மறுபுறம் பார்த்தால், அவை கிடைக்கப் பெறாவிட்டால், நிச்சயமாக அடுத்த ஆண்டு முதல் எதிர்வரும் ஆண்டுகளில் வறட்சியான காலப்பகுதியான பெப்ரவரி, மார்ச் மாதங்களாகும் போது கட்டாயமாக மின்சாரத்தைத் துண்டிக்க நேரிடும்.

இல்லையெனில், மிகவும் அதிக செலவுமிக்க எரிபொருள் மின்நிலையங்களிலிருந்து அதிகளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய நேரிடும்.

55 சதவீத அமெரிக்கர்கள் போர் நிறுத்தத்தை விரும்புகின்றனர் : கணக்கெடுப்பில் தகவல்

55 சதவீத அமெரிக்கர்கள் போர் நிறுத்தத்தை விரும்புகின்றனர் : கணக்கெடுப்பில் தகவல்

சடுதியாக உயர்வடையும் மின் கட்டணம்

அப்போது அது எவ்வகையிலும் நாட்டிற்கோ, மின்சார சபையின் புதிய நிறுவனங்களுக்கோ இலாபகரமான நிலையாக அமையாது. நுகர்வோரின் மின்சாரக் கட்டணமும் சடுதியாக உயர்வடையும். பெரும்பாலும் மின்வெட்டிற்குச் செல்ல வேண்டிய நிலை கூட ஏற்பட வாய்ப்புள்ளது.

நாட்டின் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Islandwide Power Cut Announcement

தொடர்ந்தும் இவர்களிடமிருந்து மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ளும் அதேவேளை, மின்சாரத்தைச் சேமிக்கும் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்வதே அரசாங்கம் செய்திருக்க வேண்டியதாகும். இதற்காக இந்த அமைச்சரவைப் பத்திரத்தில் இரண்டு யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

அவற்றில் ஒன்று 'Zero Export' எனப்படுவதாகும். அதாவது, மின்சார சபை ஒரு அலகு மின்சாரத்தைக் கூடப் பெற்றுக்கொள்ளாது என்பதாகும். அது பழைய 'Net Metering' முறையைப் போன்றதுதான். ஆனால் இங்குள்ள பிரச்சினை என்னவென்றால், கொள்வனவு செய்யப்படும் மின்சாரமும் விற்கப்படும் மின்சாரமும் ஈடுசெய்யப்பட மாட்டாது.

எனவே நடைமுறையில் அந்த முறைக்குச் செல்லும்போது, முன்னர் மின்சார சபை ஒரு சேமிப்பகமாகப் பயன்படுத்தப்பட்டது. இப்போது அது இல்லை. மின்நிலையம் அல்லது கூரையில் சூரிய மின்சக்திப் பலகையைப் பொருத்துவதற்கு மேலதிகமாக, மின்கலத்திற்கும் (Battery) மேலதிக செலவைச் செய்ய நேரிடும் என தெரிவித்துள்ளார்.    

உலகத் தமிழர்களிடம் இந்தோனேசியாவில் தவிக்கும் இலங்கை ஏதிலிகளின் உருக்கமான கோரிக்கை..!

உலகத் தமிழர்களிடம் இந்தோனேசியாவில் தவிக்கும் இலங்கை ஏதிலிகளின் உருக்கமான கோரிக்கை..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026