அதிகரிக்கும் பதற்றம் : நாடு திரும்புவதற்கான திகதியை அறிவித்தார் ஷேக் ஹசீனா
Sheikh Hasina
India
Bangladesh
By Jaso
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியாவில் இரண்டாண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் சூழலில், வங்கதேசத்தின் 1971-ஆம் ஆண்டு சுதந்திர வெற்றி தினமான டிசம்பர் 16 அன்று மீண்டும் வங்கதேசம் திரும்பத் திட்டமிட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
ஷேக் ஹசீனாவின் செய்தித் தொடர்பாளர், அவர் அந்தத் திகதியில் நாடு திரும்ப விரும்புவதாக ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் வெளியான அறிவிப்பு
இருப்பினும், வங்கதேச அரசாங்கம் அவர் நாடு திரும்புவதற்கு 'நாடுகடத்தல்' (extradition) நடைமுறை மட்டுமே வழி என்று கூறியுள்ளது.

வங்கதேசத்தில் அரசியல் மற்றும் சட்ட ரீதியான பதற்றங்கள் அதிகரித்து வரும் சூழலிலும், அங்கு அவரது கட்சிக்குத் தடை நீடிக்கும் நிலையிலும், 79 வயதான ஷேக் ஹசீனா தனது வருகைக்கான திகதியை முதன்முறையாக வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி