யாழில் தொடரும் மழை - திடீரென வீசிய சூழல்காற்று - வீடுகள் சேதம்
யாழில் கடந்த சில நாட்களாக மழையுடனான காலநிலை நிலவி வருகிறது.
இந்நிலையில் யாழ் .ஆழியவளையில் நேற்று பிற்பகல் 4 மணியளவில் திடீரென ஏற்பட்ட குறித்த மினி சுழல் காற்று சூறாவளி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு ஆழியவளை அருனோதயா விளையாட்டுக் கழகத்திற்கு அருகாமையிலுள்ள தையல் நிலையம் ஒன்று இரண்டு வீடுகள் என்பன இன்று பிற்பகல் திடீரென வீசிய சுழல் காற்றினால் முழுமையாகச் சேதமடைந்துள்ளதுடன் இரண்டு வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்தாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
1.00 மணிக்குப் பின் மழை
இந்நிலையில், வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் அறிவுறுத்தியுள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |