16 நாடுகள் மீது புதிய வரிகளை விதிக்க அமெரிக்கா அதிரடி திட்டம்
அமெரிக்க நிறுவனங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அதிகளவிலான தொழில்துறை உற்பத்தியை ஊக்குவிப்பதாகக் குற்றம் சாட்டி, இந்தியா, சீனா உள்ளிட்ட 16 நாடுகள் மீது புதிய வரிகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
1974ஆம் ஆண்டின் வர்த்தகச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் முடிவுகளை அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் வெளியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நாடுகளின் அரசாங்க மானியங்களால் குறைந்த விலையில் பொருட்கள் சர்வதேச சந்தைகளில் குவிக்கப்படுவதாகவும், இதனால் அமெரிக்க உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
வர்த்தகப் பேச்சுவார்த்தை
புதிய வரிகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள வரிகளுக்கு மேலதிகமாக விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கிடையில், அமெரிக்கச் சந்தையில் இந்தியப் பொருட்களுக்கான வரிகளைக் குறைப்பது தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |