யாழில் நனவான 20 வருட கனவு : குடிசைகளில் வாழ்ந்த 3 குடும்பங்களுக்குப் புதிய வீடுகள் கையளிப்பு
Jaffna
Sri Lanka
Ministry of Home Affairs
By Theepan
யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்குட்பட்ட யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகள் அற்ற பயனாளிகளுக்கான வீடுகள் கையளிக்கும் நிகழ்வு நேற்று (24) மாலை இடம்பெற்றுள்ளது.
நலன்புரி முகாம்களில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து சிறிய குடிசைகளிலே தமது வாழ்க்கையினை நடாத்தி வந்த மக்களில் வீட்டுத் திட்டத்தைப் பூர்த்தி செய்த மூன்று பேருக்கான வீடுகள் இன்று வீடமைப்பு அமைச்சர் சுனில் ரணசிங்கவினால் கையளிக்கப்பட்டது.
இதன்போது முதலாவது வீடானது மயிலிட்டி பகுதியில் உள்ள பயனாளிக்கு அமைக்கப்பட்டு அமைச்சர்களால் திறந்து வைக்கப்பட்டது.
20 இலட்ச ரூபாய்
அதேபோன்று ஏனைய வீடுகள் பலாலி அண்டனிபுரம் பகுதியில் உள்ள இரண்டு குடும்பங்களுக்கு கையளிக்கப்பட்டது.

20 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டு குறித்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி