மகிந்தவையும் விமர்சிக்கும் நாமல் ராஜபக்ச...

SLPP Mahinda Rajapaksa Rajapaksa Family
By Dharu Aug 18, 2026 07:39 AM GMT
Report

மொட்டுக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இன்னும் சில நாட்களில் சிறைக்குச் செல்வார் என்று அரசாங்கத்தின் முக்கிய தரப்பினர் மற்றும் அமைச்சர்கள் சிலரும் கூறிவருவதை அடிக்கடி நாம் கேட்கும் பார்க்கும் விடயமாக மாறியுள்ளது.

எனினும் ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்குவது யார்? என்ற கேள்வியை மொட்டுக்கட்சி தரப்பும் எதிர்கட்சிகளும் பறந்த அளவில் எழுப்பி வருகின்றன.

இன்றுவரை வழக்குகளை விசாரிப்பது நீதிமன்றம் என்றுதான் மக்களும் சமூகமும் நினைப்பதாகவும், ஆனால் நீதிவிவகாரத்தில் ஆளும்கட்சி தலையிடுவது குறித்து சந்தேகங்கள் எழுவதாகவும் அந்த தரப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன.

தீக்கிரையாவதில் இருந்து தப்பித்த மகிந்த சமரசிங்வின் வீடு

தீக்கிரையாவதில் இருந்து தப்பித்த மகிந்த சமரசிங்வின் வீடு

ராஜபக்சர்களின் ஊழல்

அமைச்சர் ஒருவர் நபர் ஒருவரை சுட்டிக்காட்டி சிறைக்குச் செல்வார் என்று கூறுகிறார் என்றால், வழக்கை எழுதுவது அவர்தானா? என்று நாமல் கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

மகிந்தவையும் விமர்சிக்கும் நாமல் ராஜபக்ச... | Namal Rajapaksa To Go To Prison In A Few Days

ஒருபுறம் இந்த கேள்வி நியாயமானதுதான். ஒரு ஜனநாயக நாட்டில் நீதித்துறையின் கருத்துக்களில் அரசாங்கம் தலையிடமுடியாது.

இருந்தும் ராஜபக்சர்களின் ஊழல் ஆட்சியை நீதித்துறை கூறிதான் இலங்கை மக்கள் அறியவேண்டும் என்ற அவசியம் இருக்காது. நாளுக்கு நாள் வெளிவரும் விசாரணை அறிக்கைகள், வாக்குமூலங்கள் எங்கெங்கோ சுற்றி இருதியில் வந்து முடிவதென்னவோ ராஜபக்சர்கள் என்ற புள்ளியில்தான்.

ஆக அரசாங்கம் நாமல் மிது முன்வைக்கும் சிறை கருத்துக்கள் நீதித்துறை மீதான தலையீடாக இல்லாவிட்டாலும், ஒரு எதிர்வுகூறலாக இருக்கலாம்.

அது ஒருபுறம் இருக்கநாமல் நடத்தும் உள்ளக் கலந்துரையாடல்களில், கோட்டாபய , பசில் மட்டுமல்லாமல், சில சந்தர்ப்பங்களில் மகிந்தவையும் விமர்சிக்கும் வகையில் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகிறார் என சிங்கள நாளிதல் ஒன்று செய்தி வெளியிட்டது.

மரண தண்டனை குற்றவாளிகளை வீட்டிற்கு அனுப்பிய மகிந்தவின் சுவாரஸ்யமான அரசியல் முரண்

மரண தண்டனை குற்றவாளிகளை வீட்டிற்கு அனுப்பிய மகிந்தவின் சுவாரஸ்யமான அரசியல் முரண்

பை தக்சலாவ பிரசார நடவடிக்கை

சில நாட்களுக்கு முன்னர் விவசாயிகள் சிலரைச் சந்தித்த சந்தர்ப்பத்திலும், கோட்டாபய மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.

மகிந்தவையும் விமர்சிக்கும் நாமல் ராஜபக்ச... | Namal Rajapaksa To Go To Prison In A Few Days

நாமல்  முன்னெடுத்து வரும் இந்தப் பிரசார நடவடிக்கை குறித்து கவனம் செலுத்தியுள்ள அரசியல் ஆய்வாளர்கள், “பை தக்சலாவ” (Bai Thaksalawa) என்ற அணுகுமுறையைப் பின்பற்றும் நாமலிடமிருந்து இதைவிட வேறுபட்ட ஒன்றை எதிர்பார்க்க முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

கோட்டாபய  தனது அரசியல் பிரசாரத்தின் அடிப்படையாக, 2016 பெப்ரவரி 04ஆம் திகதி “வியத்மக” (Viyathmaga) என்ற அமைப்பை உருவாக்கினார்.

வைத்தியர் நாலக கொடஹேவா, பேராசிரியர் சன்ன ஜயசுமன உள்ளிட்ட பலர் அந்த அமைப்பின் ஆரம்பகால உறுப்பினர்கள் அல்லது நிறுவனர்களாக இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

ஆனால், நாமல் தனது “பை தக்சலாவ” என்ற பிரசார நடவடிக்கையை மிலிந்த ராஜபக்ச, இராஜ் வீரரத்ன, அர்ஜுன் கமலநாத் போன்றவர்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும், அதன் மூலம் மேலும் அரசியலை தரக்குறைவான அல்லது கீழ்த்தரமான பிரசாரமாக மாற்றுவதே அவரது உத்தியாக மாறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ராஜபக்சர்கள் மீது நாளுக்கு நாள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களும் அதற்கு தனி ஒரு ராஜபக்சராக இருந்து நாமல் வழங்கும் பதில்களும் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கின்றன.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னரும் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ், நாமல் உட்பட நான்கு சந்தேக நபர்களுக்கு எதிராக, முந்தைய நல்லாட்சி அரசாங்கத்தின் போது தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு குறித்து மேலதிக விசாரணைகளை நடத்துமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக, குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றுக்கு அறிவித்தது.

இந்தப் முறைப்பாடு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகமவால்  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்த குற்றப் புலனாய்வுத் துறை, இந்தச் சம்பவம் குறித்த விசாரணையை முடித்து, விசாரணை கோப்புகளை சட்டமா அதிபருக்கு அனுப்பிவிட்டதாகத் தெரிவித்தது.

மிகப் பெரிய கப்பம் வசூலிப்பவர் என்ற பெயரையும் கோட்டாபயவுக்கு பெற்றுக்கொடுத்தது அடுத்த குற்றச்சாட்டு

மிகப் பெரிய கப்பம் வசூலிப்பவர் என்ற பெயரையும் கோட்டாபயவுக்கு பெற்றுக்கொடுத்தது அடுத்த குற்றச்சாட்டு

நீதித்துறை நடவடிக்கை

கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் திகதி சட்டமா அதிபரால் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போது, ​​பான் ஆசியா(Pan Asia) மற்றும் நேஷன் டிரஸ்ட் வங்கிகளிடமிருந்து கணக்குப் பதிவேடுகளைப் பெற்று, இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அவர் தங்களுக்கு அறிவுறுத்தியதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இவ்வாறு ராஜபக்சர்கள் மீது முன்னெடுக்கப்படும் நகர்வுகளுக்கு மத்தியில் நீதித்துறை நடவடிக்கைகளில் சமூகத்தின் கவனம் திரும்பியுள்ளது.

எந்த மேடைகளிலும், நிகழ்வுகளிலும் குற்றமற்றவர்கள் நாங்கள் என கூறிக்கொள்ளும் ஒவ்வொருவரும் நீதித்துறையிடம் ஒரு நாள் பதில் வழங்கவேண்டிய கட்டயத்திற்கு தற்போது தள்ளப்பட்டுள்ளனர்.

ஒரு பத்திரிகையாளருக்கு கோட்டாபய விடுத்த மிரட்டல் கதை

ஒரு பத்திரிகையாளருக்கு கோட்டாபய விடுத்த மிரட்டல் கதை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022