புதிய பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்
இலங்கையின் தற்போதைய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் (PTA) உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட புதிய சட்டமூலத்தை பிரசுரிப்பதற்கும், அதனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த விடயத்தை அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ தெரிவித்துள்ளார்.
“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த முன்மொழியப்பட்ட சட்ட வரைவு, 1979-ஆம் ஆண்டின் 48-ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தில் கண்டறியப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் ஒரு புதிய சட்டக் கட்டமைப்பை அறிமுகப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
பூர்வாங்க வரைவு
தற்போதுள்ள சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் ஒரு பூர்வாங்க வரைவைத் தயாரிப்பதற்காக, தொழில்நுட்ப வல்லுநர் குழு ஒன்று முன்னதாக நியமிக்கப்பட்டது.

அந்த வரைவின் அடிப்படையில், புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான கொள்கை ஒப்புதலை அமைச்சரவை தனது ஆகஸ்ட் 10, 2026 கூட்டத்தில் வழங்கியது.
அதனைத் தொடர்ந்து சட்ட வரைவாளரால் தயாரிக்கப்பட்ட இந்த சட்டமூலத்துக்கு தற்போது சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு முன்னர், அதனை அரசாங்க வர்த்தமானியில் வெளியிட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது” என அமைச்சர் ஜெயதிதசா தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |