கெஹெல்பத்தர பத்மே மறைத்து வைத்திருந்த ஆயுதங்கள் மீட்பு
CID - Sri Lanka Police
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dhilak
பாதாள உலக தலைவர் கெஹெல்பத்தர பத்மேவினால் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் 500 ரி -56 தோட்டாக்கள் பெலியகொட மீன் சந்தைக்கு அருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
அதன்போது, காவல்துறையினர் 4 ரி-56 மெகசின்கள் மற்றும் மைக்ரோ பிஸ்டல் வகை துப்பாக்கியொன்றையும் மீட்டுள்ளனர்.
மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு நடத்திய விசாரணைகளின் போது இந்த தகவல் தெரியவந்துள்ளது.
விசாரணை
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான மண்தினு பத்மசிறி எனப்படும் 'கெஹல்பத்தர பத்மே' உட்பட பல பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்கள் சமீபத்தில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், அவர்களை இந்தோனேசியாவில் இருந்து அழைத்து வந்து விசாரணைக்கு உட்படுத்தியதில் பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |