பரீட்சை மேற்பார்வையாளரால் பாடத்தை மறந்த உயர்தர மாணவி
Sri Lanka Police
G.C.E.(A/L) Examination
Sri Lanka Police Investigation
By Sumithiran
பரீட்சை மேற்பார்வையாளரின் செயலால் தான் பாடத்தை மறந்துவிட்டதாகத் தெரிவித்து உயர்தரத்தில் பரீட்சைக்கு தோற்றும் மாணவி ஒருவர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மாத்தளையில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றில், உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவி ஒருவரே இவ்வாறு முறைப்பாடு அளித்தவராவார்.
மேற்பார்வையாளர் அளித்த பதிலால் அதிர்ச்சி
வினாத்தாளுக்கு விடை எழுதும்போது, மேலதிகமாக விடைத்தாள் கேட்டபோது, மேற்பார்வையாளர் அளித்த பதிலால் தான் அதிர்ச்சியடைந்ததாக மாணவி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
தர்க்கவியல் வினாத்தாளுக்கு விடைகளை எழுதும்போது, பரீட்சை நிலைய மேற்பார்வையாளர் செயற்பட்ட விதத்தின் காரணமாக தான் பாடத்தை மறந்துவிட்டதாக இந்த மாணவி முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
மேலதிக விசாரணை
எனினும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மாத்தளை தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 16 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்