இலங்கைக்கு ஆதரவாக களத்தில் இறங்கியது இந்தியா
Sri Lanka
IMF Sri Lanka
India
By Sumithiran
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை எதிர்பார்க்கும் நிதி உதவிக்கு திடமான ஆதரவை அளிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இந்திய நிதி அமைச்சகத்தின் அதிகாரி ராஜத் குமார் மிஸ்ரா, சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவாவுக்கு எழுதிய கடிதத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனவரி 16ஆம் திகதி இந்தக் கடிதம் அனுப்பப்பட்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தேவையான ஆதரவு வழங்கப்படும்
இலங்கையின் கடனை நிலையாக பேணுவதற்கு தேவையான ஆதரவை இலங்கைக்கு வழங்குவதாக அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்திய இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வங்கி இலங்கைக்கு வழங்கும் நிதி மற்றும் கடன் சலுகைகள் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையின் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்க வழிவகுக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 22 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
6 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்