நல்லூர் ஆலயத்திற்கு எதிரே பாரிய விபத்து! கடைக்குள்ளே புகுந்த பாரவூர்தி
யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக வேகக் கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி கடைக் கட்டத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
பருத்தித்துறை வீதியூடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பாரவூர்தி இன்று (07) காலை நல்லூர் ஆலயத்துக்கு முன்பாக உள்ள வளைவில் திரும்பும் போது அங்கிருந்த கடைக் கட்டத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் பாரவூர்தியின் முன்பக்கம் கடுமையாக சேதமடைந்ததுள்ளடன் குறித்த கட்டடமும் சேதமடைந்துள்ளது.
காயமடைந்த சாரதி
பாரவூர்தியின் சாரதி காயங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை அருகில் இருந்த முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் இருந்த முச்சக்கரவண்டியொன்றும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த நிலையில் விபத்து தொடர்பாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |