யாழில் திருமணமான சில மாதங்களில் ஆணொருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!
Jaffna
Sri Lanka Police Investigation
Marriage
By Laksi
யாழ்ப்பாணம் -மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த ஆணொருவர் திருமணமான சில மாதங்களில் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார்.
இச்சம்பவமானது நேற்று(25) மானிப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது வைத்தியசாலை வீதி மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த சிவாயநம சுயாஸ்கரன் (வயது 31) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மன அழுத்தம்
இவருக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் திருமணம் இடம்பெற்ற நிலையில் தற்போது விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது.
இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் இன்றையதினம் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 8 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி