முல்லைத்தீவில் துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது!
Sri Lanka Police
Mullaitivu
Sri Lanka Police Investigation
Northern Province of Sri Lanka
By Shadhu Shanker
முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் இடியன் துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (04) இரவு 8.30 மணியளவில் காவல்துறையினரின் சோதனை நடவடிக்கையில் சட்டவிரோதமாக பதிவுகளின்றி இடியன் துப்பாக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேப்பாபிலவு பகுதியிலுள்ள வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் வீட்டினை சோதனை செய்த போது பதிவுகள் ஏதுமின்றி சட்டவிரோதமாக துப்பாக்கி இரண்டினை வைத்திருந்ததன் பேரிலே 34 வயதுடைய நபர் இடியன் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைகளின் பின்னர் இன்று(6) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்