கனடா செல்ல முயன்றவர் கட்டுநாயக்காவில் கைது
போலியான கனேடிய விசாவுடன் கனடா செல்ல முயன்ற நபர் இன்று மாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
மெல்சிரிபுர, மதஹபொலவைச் சேர்ந்த 34 வயதுடைய பயணி, டுபாய் ஊடாக கனடா செல்லும் விமானத்தில் ஏறுவதற்காக இன்று மாலை விமான நிலையத்திற்கு வந்ததாக குடிவரவு வட்டாரங்கள் தெரிவித்தன.
கனேடிய விசாவின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம்
குடியகல்வு கவுண்டரில் இருந்த குடிவரவு அதிகாரி, பயணியின் கனேடிய விசாவின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் அடைந்து, அவரை குடிவரவு மற்றும் குடியகல்வு துறையின் எல்லை கண்காணிப்பு பிரிவுக்கு (BSU) பரிந்துரைத்துள்ளார்.

பயணியின் உண்மையான இலங்கை கடவுச்சீட்டில் ஒட்டப்பட்டிருந்த விசா போலியானது என குடியகல்வு துறையின் எல்லை கண்காணிப்பு பிரிவு விசேட சோதனையின் மூலம் கண்டறிந்துள்ளது.
விசா தயாரிக்க வழங்கப்பட்ட ரூபா02 மில்லியன்
விசாரணையின் போது அந்த நபர் கனேடிய விசாவைத் தயாரிப்பதற்காக முகவருக்கு 2 மில்லியன் ரூபாய் வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

மேலதிக விசாரணைகளுக்காக பயணி பின்னர் விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        