பாடத்திட்டத்தில் ஏற்படப்போகும் மாற்றம் : கல்வியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
Ministry of Education
A D Susil Premajayantha
Sri Lankan Schools
By Sumithiran
பாடசாலைகளில் 8ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் உள்ள தகவல் தொழில்நுட்ப பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தகவல் தொழில்நுட்பத்துடன் செயற்கை நுண்ணறிவும் அறிமுகப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
அதன் முன்னோடித் திட்டம் 17 பாடசாலைகளை உள்ளடக்கிய வகையில் மார்ச் 19 ஆம் திகதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சுடன் கைகோர்க்கும் மைக்ரோசொப்ட் நிறுவனம்
இதற்காக கல்வி அமைச்சுடன் மைக்ரோசொப்ட் நிறுவனம் இணைந்து செயற்படுவதாகவும் இதன் மூலம் சர்வதேச தரத்திற்கு ஏற்ப பாட அறிவை இந்நாட்டு பிள்ளைகளுக்கு வழங்க முடியும் எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.
கல்கிசையில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்