தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் புதிய சட்டம் தொடர்பான விழிப்புணர்வு வீதி நாடகம்..!
தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் புதிய சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நாடகம் ஒன்று இன்று காத்தான்குடி நகர் பகுதியில் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இன்று காலை 10 மணியளவில் காத்தான்குடி நகர் பகுதியில் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய இணைப்பாளர் ஏ. எம் என். விக்டர் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் சிராணி தேவகுமார் அவர்களின் வழிநடத்தலில் நடத்தப்பட்டுள்ளது.
வாக்குரிமை தொடர்பாக மக்களது நிலைப்பாடு மற்றும் நன்கொடைகளை வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிதி மூலங்கள் வரவு மற்றும் செலவு அறிக்கைகள், தண்டம் அல்லது அவதாரம், மக்களது கடமை ,போன்ற விழிப்புணர்வு பதாகைகளுடன் குறித்த வீதி நாடகம் நடைபெற்றுள்ளது.
இதன் போது வாக்காளர்களை தெளிவுபடுத்தும் விதத்தில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
இதன்போது ஒரு தேர்தல் மக்களுக்கு எவ்வளவு அவசியம் என்பதையும் மக்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தும் விதத்தில் குறித்த வீதி நாடக நிகழ்வு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.







