சகோதரர்கள் இருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மன்னார் (Mannar) மேல் நீதிமன்றத்தில் 16 வயதுக்கு குறைந்த பெண் பிள்ளையை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு 7 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி மிஹால் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
குற்றத்தின் பாரதூர தன்மை, பாதிக்கப்பட சிறுமியின் நிலை, இவ்வாறான குற்றங்கள் மேலும் இடம்பெறாமல் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னார் மேல் நீதிமன்றம்
7 வருட கடூழிய சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக தண்டப்பனமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 500,000 ரூபா நட்டஈட்டு தொகையும் வழங்க தீர்ப்பளிக்கப்பட்டது.
சகோதரர் ஒருவருக்கு, வயது குறைந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய ஒத்தாசை புரிந்தமைக்காகவே இரண்டாம் நபருக்கு அதே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இதில் வழக்கு தொடுனர் தரப்பில் சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன் மற்றும் சிவஸ்கந்தஶ்ரீ ஆகியோர் வழக்கை நெறிப்படுத்தி இருந்தனர்.
வழக்கு நியாயமான சந்தேகத்துக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில், குற்றவாளிகளுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
