புத்தாண்டுகால விளையாட்டு : வெளியானது வழிகாட்டுதல்கள்
புத்தாண்டு கால விழாவையொட்டி நடத்தப்படும் விளையாட்டு போட்டிகள் தொடர்பாக தொடர் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
குறித்த காலப்பகுதியில் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைக்கும் வகையில் தொடர் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பித்தல்
இதேவேளை, சில விளையாட்டுக்களுக்கான மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பித்தல் உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சமூக வைத்திய நிபுணர் சமித்த சிறிதுங்க தெரிவித்தார்.
அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை
ஓட்டப் பந்தயம், மரதன் உள்ளிட்ட வருடாந்த விளையாட்டுக்கள் தொடர்பில் தேவையான தலையீடுகள் தொடர்பில் அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரதி காவல்துறை மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டில், குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 124,760 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த வருடத்தின் ஏப்ரல் மாதத்தில் குடிபோதையில் வாகனம் செலுத்தியதன் காரணமாக விபத்துகளில் 07 பேர் உயிரிழந்துள்ளதாக பிரதி காவல்துறை மா அதிபர் இந்திக்க ஹப்புகொட குறிப்பிட்டார்.
வழிகாட்டுதல்கள் வருமாறு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |