யாழ். மாநகரசபைக்கு முன்னால் ஒருவர் உண்ணாவிரதப் போராட்டம்..!
Jaffna
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு முன்னால் தனிநபர் ஒருவர் இன்று காலை முதல் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு உட்பட்ட பருத்தித்துறை வீதியில் வசிக்கும் குறித்த நபரின் வீட்டிற்கு அருகில் அனுமதி பெறப்படாத கட்டிடம் ஒன்றும் உள்ளதாகவும் அந்த கட்டிடத்தின் கழிவு நீர் தன்னுடைய வீட்டிற்குள் வருவதாகவும். இதனை மாநகரசபையிடம் பல்வேறு தடவைகள் முறையிட்டும் எதுவித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் இதனாலேயே ஒருநாள் அடையாள உண்ணாவிரத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.
குறித்த நபருடன் யாழ்மாநகரசபை அதிகாரிகள் கலந்தாலோசித்தபோதும் குறித்த நபர் தொடர்சியாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி