ஆணொருவருக்கு விதிக்கப்பட்ட எட்டு ஆயுள் மற்றும் 88 ஆண்டுகால சிறை
Sexual harassment
By Sumithiran
பெண்களை கடத்தி பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய பின்னர் அவர்களை கொலை செய்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து நபர் ஒருவருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 8 ஆயுள் தண்டனையும் 88 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்துள்ளது.
பாலியல் வன்புணர்வு,கொலை
கொள்ளை, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் சட்டவிரோதமாக வேறு நாட்டிற்குள் பிரவேசித்தமை போன்ற குற்றங்களிலும் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடத்தப்பட்ட பெண்ணின் கைபேசியை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 36 வயதுடைய சந்தேகநபர் 2021ஆம் ஆண்டு அந்நாட்டு காவல்துறையினரால் முதலில் கைது செய்யப்பட்டார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி