காசா மீது இஸ்ரேல் திடீர் வான்வழித் தாக்குதல்! குறிவைக்கப்பட்ட தளபதிகள்
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாத போர் நிறுத்தத்திற்குப் பிறகு இன்று காசா மீது இஸ்ரேல் நடத்திய மிகக் கடுமையான வான்வழித் தாக்குதல்களில், 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வீடுகள், கூடாரங்கள் மற்றும் ஒரு காவல் நிலையம் மீதே குறித்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் கடந்த 30.01.2026 அன்று நாள் நடந்த போர் நிறுத்த மீறலுக்கு பதிலடி கொடுப்பதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.
தெற்கு காசா
தெற்கு காசாவில் உள்ள ரஃபாவில் உள்ள ஒரு சுரங்கப்பாதையில் இருந்து எட்டு துப்பாக்கிதாரிகள் வெளிப்படுவதை அதன் துருப்புக்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

இது போர் நிறுத்தத்தின் கீழ் இஸ்ரேலிய படைகளால் கட்டுப்படுத்தப்படும் ஒரு பகுதியாகும்.
பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸ் மற்றும் அதன் கூட்டாளியான இஸ்லாமிய ஜிஹாத்துக்குச் சொந்தமான தளபதிகள், ஆயுதக் கிடங்குகள் மற்றும் உற்பத்தித் தளங்களை அது குறிவைத்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது.
காசாவின் பாதிக்கும் குறைவான பகுதியையே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ், அங்கு கிட்டத்தட்ட 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தற்காலிக கூடாரங்களிலும் சேதமடைந்த கட்டிடங்களிலும் வசிக்கின்றனர்.
இந்நிலையில் இஸ்ரேல் போர் நிறுத்தத்தை மீறியதாகக் கூறியது. சனிக்கிழமை தாக்குதல்களில் அதன் உறுப்பினர்கள் அல்லது தளங்கள் ஏதேனும் தாக்கப்பட்டனவா என்பது குறித்து அது எந்தத் தகவலும் வெளியிடவில்லை.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை… 2 நாட்கள் முன்