தனிப்பட்ட தகராறு - நபர் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை..!
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Kiruththikan
கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளை பகுதியில் தனிப்பட்ட தகராறு காரணமாக நபர் ஒருவர் மிகவும் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த நபர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
69 வயதுடைய நபர்
தெஹிவளை, அவுபர்ன் சைட் பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரை வெட்டிக் கொன்ற சந்தேக நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
இதனடிப்பைடையில் தெஹிவளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்