பிள்ளையானின் திமிருக்கு காரணம்! பின்னணியில் மறைந்துள்ள ரகசியம்
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சிறைவைக்கப்பட்டுள்ள பிள்ளையான் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலையானபோது ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்துக்கள் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளன.
அதன்போது, அவர் தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலியானவை என்றும், தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்காவின் வாக்குறுதிகளைப் போலவே இவையும் பொய்யானவை என்றும் அவர் பகிரங்கமாக கூறியிருந்தார்.
ரவீந்திரநாத் கொலை வழக்கு மற்றும் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான சந்தேகங்கள் என பல்வேறு பாரதூரமான குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
இவ்வாறானதொருபின்னணியில், சிறையில் இருக்கும் பிள்ளையான், எதன் அடிப்படையில் இவ்வளவு நம்பிக்கையுடனும் துணிச்சலுடனும் ஜனாதிபதியை விமர்சிக்கிறார்? இது மீண்டும் ஒரு ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறியா அல்லது சிஐடி (CID) விசாரணைகளின் பலவீனமா? இது தொடர்பில் அலசி ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய பார்வை,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |