விபத்துக்குள்ளான இலங்கை கடற்படை படகு ! மீட்கப்பட்ட 11 பேர்
Sri Lankan Peoples
Sri Lanka Navy
Sri Lanka Air Force
By Dhilak
புதிய இணைப்பு
அங்குலானவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் விபத்துக்குள்ளான கடற்படை படகில் இருந்து 11 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
முதலாம் இணைப்பு
அங்குலான அருகே கடலில் டோரா என்ற சிறிலங்கா கடற்படை படகு ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
கிடைத்த தகவலின் அடிப்படையில், படகில் உள்ளவர்களை மீட்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன என்று கடற்படை ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
மீட்பு பணிகள்
இதன்படி, படகில் உள்ளவர்களை மீட்க இலங்கை விமானப்படையும் உதவி செய்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை, விபத்துக்குள்ளான படகை கண்காணிப்பதற்காக விமானப்படையின் MI 17 ரக உலங்குவானூர்தியும் பெல் 412 ரக உலங்குவானூர்திகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்று விமானப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..! 5 மணி நேரம் முன்
போராடுவதும், போராடிப் போராடியே இறப்பதுமாக நீளும் துயரம்…
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்