பெட்ரோல் குண்டுப் பொதி சிக்கியது
நானு ஓயா காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட கிலாஸோ மேல் பிரிவு தோட்டத்தில் பெட்ரோல் குண்டு தயாரிக்க கூடிய உபகரணங்கள் அடங்கிய பொதி ஒன்றை நானு ஓயா காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
நானு ஓயா காவல்துறைக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கிலாஸோ தோட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை (18) மாலை விரைந்த காவல்துறையினர் தனி வீடொன்றுக்கு அருகில் இருந்து இப்பொதியை கைப்பற்றியுள்ளனர்.
அநாதரவாக விடப்பட்ட பொதி
குறித்த பொதியில் பெட்ரோல் நிரப்பப்பட்ட போத்தல்கள், வயர்கள், முக்கோண பட்டாசுகள் உட்பட பல பொருட்கள் அடங்கியிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கிலாஸோ தோட்ட மேல் பிரிவில் தோட்ட மக்கள் குடியிருப்புகளுக்கு அப்பால் உள்ள தனி வீட்டின் வாசல் பகுதியில் கடந்த நான்கு நாள்களாக அநாதரவாக விடப்பட்ட பொதி செய்யப்பட்ட பெட்டி ஒன்று இருந்துள்ளது.
ஸ்தலத்திற்கு விரைந்த காவல்துறை
குறித்த பெட்டியை அவதானித்த அயல் வீட்டு சிறுவன், யாரும் அந்தப் பெட்டியை எடுத்து செல்லாத நிலையில் சந்தேகமடைந்து பெட்டியை பரிசோதித்துள்ளான்.
பெட்டியை பிரித்த போது
உள்ளே திரவம் நிரப்பப்பட்ட
போத்தல்கள்,
வயர்கள், பட்டாசுகள்
இருப்பதை அவதானித்து இது
தொடர்பாக அயலவர்களிடம்
தெரிவித்ததை அடுத்தே நானு
ஓயா காவல்துறைக்கு தகவல்
வழங்கப்பட்டுள்ளது.
