மாணவன் ஓட்டிச் சென்ற வாகனம் மோதி காவல்துறை உத்தியோகத்தர் காயம்..!
Sri Lankan Peoples
By Kiruththikan
சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 18 வயதுடைய மாணவன் ஓட்டிச் சென்ற வாகனம் ஒன்றுடன் மோதுண்டதில் கொள்ளுப்பிட்டி கடற்கரை வீதியில் கடமையாற்றிய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொள்ளுப்பிட்டி கடல் வீதியில் கடமையாற்றிய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் வாகனத்தை நிறுத்துமாறு சைகை செய்ததாக கொள்ளுப்பிட்டி கடல் வீதியில் கடமையாற்றிய அப்பகுதியின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வாகனத்தை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் சர்வதேச பாடசாலை மாணவனால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை உத்தியோகத்தர் மீது மோதி காயப்படுத்தியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி