காவல்துறை உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது - அனுராதபுரத்தில் சம்பவம்
Sri Lanka Police
Anuradhapura
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
Gun Shooting
By Nithusan
அனுராதபுரம் ஹொரவ்பொத்தான - வாஹல்கட காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காவல்துறை உத்தியோகத்தர் உட்பட இருவரை கைது செய்துள்ளதாக வாஹல்கட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் ரொட்டவெவ காவல்துறை நிலையத்தில் கடமையாற்றி வரும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர், காவல்துறை எல்லையை தாண்டி T-56 ரக துப்பாக்கியை வேட்டையாடுவதற்காக கொண்டு சென்ற போது கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
ஹொரவ்பொத்தான 01ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த யோதகே சுனில்சாந்த (58வயது) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட குறித்த காவல்துறை உத்தியோகத்தரை கெப்பித்திகொள்ளாவ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி