கனடாவில் உதயமான ஏ.ஆர். ரஹ்மான் வீதி..!
கனடாவின் மார்கம் பகுதியில் வீதி ஒன்றுக்கு ஏ.ஆர். ரஹ்மானின்(A.R Rahman Street) பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெயர் சுட்டு நிகழ்வில் கலந்துகொண்டதாக சிறப்பித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், மார்க்ம் மாநகர மேயர் பிராங்க் ஸ்கார்பிட்டி மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர்.
கற்பனை கூட செய்து பார்த்தது கிடையாது
இதேவேளை, ஏ.ஆர். ரஹ்மான் இது தொடர்பில் தனது முகநூலில் கருத்தொன்றையும் பதிவிட்டுள்ளார்.
வாழ்வில் இவ்வாறான ஓர் கௌரவிப்பு கிடைக்கும் என கற்பனை கூட செய்து பார்த்தது கிடையாது என ரஹ்மான் முகநூலில் பதிவிட்டுள்ளார்.
மார்க்ம் மாநகர மேயர், இந்திய கொன்சோல் அதிகாரி அபூர்வா ஶ்ரீவட்சவா மற்றும் கனேடிய மக்களுக்கு நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
ரஹ்மான் என்ற பெயர் தமது பெயர் அல்ல எனவும் அது கருணையை குறிக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பெயர் அமைதியையும், சுபீட்சத்தையும், நல்ல ஆரோக்கியத்த்தையும் கனேடிய மக்களுக்கு வழங்க வேண்டுமென பிரார்த்தனை செய்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.