சிறிலங்கா இராணுவ அதிகாரியின் சட்டவிரோத செயல் : சுற்றிவளைத்து பிடித்த காவல்துறை
Sri Lanka Army
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Sumithiran
விற்பனைக்கு தயாராக வைத்திருந்த 4 இரத்தினக்கற்களுடன் ஓய்வுபெற்ற சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் பேருவளை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தர்கா நகரில் வசிக்கும் 50 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
இரத்தினக் கற்களை நான்கு கோடிக்கு விற்க
குறித்த 4 இரத்தினக் கற்களையும் இரண்டு கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய சந்தேகநபர் திட்டமிட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்குரிய ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி களுத்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |