சுமந்திரனின் கருத்தால் வெடித்தது சர்ச்சை: கைவிரித்த சிறீதரன், மாவை
சிறிலங்காவில் இந்த வருடத்தின் இறுதிக்காலாண்டில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படும் அரச தலைவர் தேர்தலை மையப்படுத்திய தென்னிலங்கை கட்சிகளின் வியூகங்கள் ஆரம்பித்துள்ள நிலையில் இந்தவாரம் ஜேவிபி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் முக்கிய சந்திப்புக்களை நடத்தத்திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில் தமிழரசுக் கட்சிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் ஒரு சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும் இவ்வாறான சந்திப்பு இடம்பெறுவது குறித்து தமக்கு எதுவும் தெரியாதென, கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்ட சிவஞானம் சிறீதரனும் தெரிவித்துள்ளனர்.
கைவிரித்த சிறிதரன்,மாவை
இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பு அடுத்தவாரம், இடம்பெறவுள்ளதாக சுமந்திரனால் தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையிலேயே ஐ.பி.சி. தமிழுக்கு இந்த விடயத்தை இருவரும் பகிரங்கப்படுத்தியுள்ளனர்
சுமந்திரன் கொழும்பில்
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கொழும்பில் உள்ளதாகவும், அவருடன் தாம் கலந்துரையாடல்களை நடத்தவில்லையெனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
எனவே தேசிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடல்கள் தொடர்பான மேலதிக விபரங்கள் தமக்கு தெரியாது என அவர்கள் கூறியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |