இலங்கையில் வறிய மாணவர்களுக்கு ஜப்பான் அளித்த அன்பளிப்பு
தொலைதூரப் பிரதேசங்களில் உள்ள பாடசாலை மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை ஊக்குவிக்கும் வகையில், மாணவர்கள் தொடர்ச்சியாக பாடசாலைக்குச் செல்லும் வாய்ப்பை வழங்குவதற்காக ஜப்பானிய ‘சைல்ட் பண்ட்’ அமைப்பினால் இலங்கைக்கு மானியமாக மொத்தம் 500 மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
இந்த மிதிவண்டிகள் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் பத்தரமுல்ல வாட்டர்ஸ் எட்ஜில் இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
போக்குவரத்துச் சிரமங்கள் உள்ள 12 மாவட்டங்களில்
இந்நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹடேகி, ஜப்பானிய 'சைல்ட்ஃபண்ட்' நிறுவனத்தின் பிரதிநிதி யுகோ இஷாந்தா மற்றும் இலங்கை 'சைல்ட்பண்ட்' நிறுவனத்தின் தேசிய பணிப்பாளர் திருமதி அதிதி கோஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த மிதி வண்டிகளை வழங்க மொனராகலை, புத்தளம், முல்லைத்தீவு போன்ற போக்குவரத்துச் சிரமங்கள் உள்ள 12 மாவட்டங்களில் உள்ள 108 பாடசாலைகளில் இருந்து 12 முதல் 16 வயதுக்குட்பட்ட பொருத்தமான மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
முக்கிய அளவுகோல்
இந்த மிதிவண்டிகளை வழங்குவதில் கருத்தில் கொள்ளப்படும் முக்கிய அளவுகோல்களில் ஒன்று, வீட்டிலிருந்து பாடசாலைக்கு குறைந்தபட்சம் இரண்டரை கிலோமீட்டர் தூரம் இருக்க வேண்டும். மாணவர்களின் குடும்பங்களின் நிதி சிக்கல்கள் மற்றும் பிற சிரமங்களும் கவனத்தில் கொள்ளப்படுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |