டலஸ் அணியில் வெடித்தது பிளவு
Dullas Alahapperuma
G. L. Peiris
Sri Lanka Podujana Peramuna
By Sumithiran
அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்க்கட்சியின் சுயேச்சைக் குழுவாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையிலான குழு பிளவுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வரும் தேர்தலில் எந்தக் குழுவுடன் கூட்டணி அமைக்கப் போகிறது என்பதுதான் இதன் அடிப்படை.
தேர்தல் கால கூட்டால் குழப்பம்
எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என எம்.பி.க்கள் குழு தெரிவித்துள்ளது. எனினும் விமல் வீரவன்ச தலைமையில் உத்தர லங்கா கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்பட வேண்டுமென மற்றுமொரு குழு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலைமையால் எதிர்காலத்தில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவெடுப்பதில் அக்குழுவினர் முடிவெடுக்க முடியாமல் உள்ளதாக தெரியவருகிறது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி