பிரித்தானியா புலம்பெயர காத்திருப்போருக்கு வெளியான முக்கிய தகவல்
பிரித்தானியா (UK) அந்நாட்டின் குடியேற்றச் சட்டங்களில் பாரிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
குடியேறுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விதமான குறித்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக பிரித்தானியா அரசாங்கம் அறிவித்துள்ளது.
அந்தவகையில், பிரித்தானியாவில் குடியுரிமை பெற தேவையான கால அவகாசம் 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக இரட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மிகவும் கடுமையான நடவடிக்கை
அத்துடன் பிரித்தானியாவில் குடியேற ஆங்கில மொழித் தகமை மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த மாற்றங்கள் குடியுரிமை பெற விரும்பும் வெளிநாட்டு குடிமக்களுக்கு சவாலாக மாறலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் மிகவும் கடுமையான நடவடிக்கையாக பார்க்கப்படுவதாகவும்,மனித உரிமை பாதுகாப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இச் சட்டங்கள் விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா
