உச்சக்கட்ட வர்த்தக மோதல்! கனடாவுக்கு எதிராக ட்ரம்பின் கடுமையான முடிவு
கனடாவுடன் (Canada) வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது மிகவும் கடினமானது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து ட்ரம்ப் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்நிலையில், இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கனடாவுக்கு விதிக்கப்படும் வரி வீதத்தை 25 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக அமெரிக்கா உயர்த்தியுள்ளது.
புதிய வரி வீதங்கள்
இந்த புதிய வரி விதிப்புகள் வெள்ளை மாளிகையால் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், பல நாடுகளுக்கும் புதிய வரி வீதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை ஏழு நாட்களுக்குள் நடைமுறைக்கு வரவிருக்கின்றன.
அந்தவகையில், இன்று (2025.08.01) முதல் நடைமுறைக்கு வரவிருந்த இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான 30 சதவீதமான தீர்வை வரி வீதத்தை அமெரிக்கா (USA) 20 சதவீதம் ஆகக் குறைத்துள்ளதாக வெள்ளை மாளிகையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கனடாவின் ஏற்றுமதி வரி
அதன்படி, தெற்காசிய நாடுகளான பங்களாதேஷுக்கு 35 இலிருந்து 20 சதவீதம் ஆகவும், பாகிஸ்தானுக்கு 30 இலிருந்து 19 சதவீதம்ஆகவும் வரி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவிற்கு 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில் பங்காளதேஸ், வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள வரிக்கு ஒத்ததாகவே வரி விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் கனடாவின் ஏற்றுமதிகள் மீதான வரி 25 சதவீதம் இலிருந்து 35 சதவீதம் ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
