ஈரானுடன் பெட்ரோலிய வர்த்தகம்: இந்தியாவுக்கு எதிராக ட்ரம்ப் விதித்துள்ள தடை
ஈரானுடன் பெற்றோலியம் மற்றும் ரசாயனப் பொருட்களுக்கான வர்த்தகத்தில் ஈடுபட்டதற்காக ஆறு இந்திய நிறுவனங்கள் உட்பட மொத்தம் 20 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
குறித்த வர்த்தகத்தின் மூலமாக வரும் வருமானத்தை பயன்படுத்தி ஈரானிய அரசாங்கம் மத்தியகிழக்கில் பதற்றத்ததை ஏற்படுத்திய வருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
அதன்படி, ஈரானை நோக்கி செல்லும் வருவாயை நிறுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த தடை அமைகிறது என அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
சொத்துகள் முடக்கம்
இந்த நிலையில், குறித்த நிறுவங்களின் அமெரிக்காவுக்குள் உள்ள சொத்துகள் மற்றும் சொத்துப் பங்குகள் அனைத்தும் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன, அமெரிக்க நபர்களோ அல்லது அமெரிக்கா வழியாக நடைபெறும் எந்தவொரு பணம், பொருள், சேவை தொடர்புடைய பரிவர்த்தனைகளும் தடை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
50% பங்குதாரர்களுக்கு தடை
மேலும், இந்த தடைகள் கீழ் உள்ள நிறுவனங்களில் 50% பங்குதாரராக இருப்பவர்கள் தொடர்புடைய பிற நிறுவனங்களும் இயல்பாகவே தடைக்குள்ளாக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, அமெரிக்க நபர்கள் இந்நிறுவனங்களுடன் பணச் செயற்பாடுகள், சேவைகள், நன்கொடைகள் உள்ளிட்ட எதையும் செய்ய முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் மாலை திருவிழா
