இன்று 6 நிமிடங்கள் இருளில் மூழ்கும் நாடுகள்
உலகம் முழுவதும் இன்று 6 நிமிடங்கள் இருளில் மூழ்கும் வெளியான செய்திகளை நாசா (Nasa) மறுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இன்று (02.08.2025) நிகழ இருக்கும் சூரிய கிரகணம் இந்த நூற்றாண்டில் நிகழ இருக்கும் மிக நீண்ட சூரிய கிரகணம் என்று தெரிவிக்கப்பட்டுகின்றது.
சூரிய கிரகணம் என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் ஒரு அரிய வான நிகழ்வாகும், இதில் சூரிய ஒளியைத் தடுத்து நமது கிரகத்தின் மீது நிழல் விழுகிறது.
பூமியை முழுவதும் இருளாக ஆக்காது
இவ்வாறாக இன்று நிகழும் இந்த முழு சூரிய கிரகணமும் கிட்டத்தட்ட 6 நிமிடங்கள் வரை வானத்தையும் பூமியின் சில பகுதிகளையும் இருளாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இது பூமியை முழுவதும் இருளாக ஆக்காது.
அந்தவகையில், ஸ்பெயின், ஜிப்ரால்டர், மொராக்கோ, அல்ஜீரியா, துனிசியா, லிபியா, எகிப்து, சூடான், சவுதி அரேபியா, ஏமன் மற்றும் சோமாலியா உள்ளிட்ட 11 நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் இது முழு இருளாக மாறாமல் மாலைநேர வெளிச்சம் போல மங்கலான வெளிச்சத்துடன் இருக்கும். மற்ற நாடுகளில் இதை காண முடியாது.
இது குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா
