நூற்றாண்டில் நிகழும் அதிசயம்..! இருளில் மூழ்க போகும் உலகம்
21ம் நூற்றாண்டின் முக்கியமான வானியல் நிகழ்வான மிக நீண்ட சூரிய கிரகணம் 2025 ஆகஸ்ட் 2ம் தேதி நிகழ்கிறது.
இந்த அரிய நிகழ்வு சந்திரன் பூமிக்கு அருகில் வரும் போதும், பூமி சூரியனிலிருந்து வெகு தொலைவில் இருக்கும் போது நிகழ்கிறது. இந்த சீரமைவின் காரணமாக, சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்கும் நேரம் அதிகரிக்கிறது.
வழக்கமான கிரகணங்கள் சில நிமிடங்களில் முடிவடையும் நிலையில், இந்த நிகழ்வு சுமார் 6 நிமிடங்கள் 23 வினாடிகள் வரை நீடிக்கும்.
ஒளி வட்டத்தைக் காண முடியும்
1991 மற்றும் 2114 க்கு இடையில் பூமியில் இருந்து பார்க்கக் கூடிய மிக நீண்ட சூரிய கிரகணம் இதுவாகும்.
முழு கிரகணத்தின் போது சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான ஒளி வட்டத்தைக் காண முடியும்.
ஆசியா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் இது முழுமையாகத் தெரியாது. ஸ்பெயின், எகிப்து மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இது முழுமையாக தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இந்த சூரிய கிரகணம் தெளிவாகத் தெரியும். சில பகுதிகளில் ஆறு நிமிடங்களுக்கு மேல் இருள் சூழ்ந்திருக்கும்.
இந்தியாவின் மேற்குப் பகுதி
தெற்கு ஸ்பெயின், வட ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, ஏமன், மற்றும் ஓமன் போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் முழு கிரகணத்தையும் காணலாம்.
எனினும், இந்தியா முழுவதும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை கிரகணம் தெரியும். இந்தியாவின் மேற்குப் பகுதிகளில் ஓரளவு தெரியும்.
இந்தியாவில், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கோவா போன்ற மாநிலங்களில் சூரியனின் 10% முதல் 30% வரை மறைக்கப்படும்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
